
பர்ஸ்யூட் ஆஃப் ஹாப்பினஸ்.
இந்த படம் ஆரம்பிக்கும் முன்ன்ரே நம் கண்களை கவர்வது..ஹாப்பினஸ் என்பதன் ஸ்பெல்லிங். "I" பதிலாக "Y" போடபட்டுள்ளது..இதற்கான விளக்கம் படத்தின் சில காட்சிகளிலேயே காண்பித்து விடுகிறார் டைரக்டர்.
படத்தைப் பற்றி கூறுவதற்கு முன், படத்தின் சிறப்பம்சம், கோல்டன் குலோப் விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருதுக்கு வில் ஸ்மித் நாமினேட் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாது, வில் ஸ்மித்தின் சொந்த மகன் இந்த படத்தில் வில் ஸ்மித்தின் மகனாக நடித்து உள்ளார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா?..சுட்டிப் பையன் அருமையாக நடித்து இருக்கிறான்.
படத்தின் கதாநாயகன் வில் ஸ்மித் ஒரு சாதரான மெடிக்கல் சேல்ஸ்மேன்.தன் குடும்பத்தை காபாற்ற தன்னால் முடிந்த வரை போராடுகிறார். பண நெருக்கடி குடும்பத்தில் குழப்ப்த்தை ஏற்படுத்த,மனைவி தன்னை பிரிந்து சென்றாலும் மகனை விட்டு கொடுக்காமல் தன்னுடன் வைத்துக் கொள்கிறார்..இந்த சமயத்தில் தான் அவருக்கு ஒரு சம்பளம் இல்லாத இன்டர்ன்ஷிப் வாய்ப்பு ஒரு மிகப் பெரிய பங்குச் சந்தை நிறுவனத்தில் கிடைக்கிறது...20 பேரில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்கும் அந்த நிறுவந்த்தில் முழு நேர பணியில் எப்படியும் நுழைந்து விட வேண்டும் என்று போராடுகிறார்..படம் முழுவதும் இந்த போராட்டம் தொடர்கிறது..சம்பளம் இல்லாத பணியில் இருக்கும் இவருக்கு இருக்க இடம் இல்லை, பணத்திற்கு என்ன செய்கிறார்? தன் 5 வயது மகனை வைத்துக் கொண்டு எப்படி இந்த நெருக்கடியை சமாளிக்கிறார்.முன்னுக்கு வருவாரா? என்பதே கதை...இது என்ன, சாதாரண ரெகுலர் சினிமா கதை மாதிரி தானே என்று நினைப்பவர்களுக்கு...அது தான் இல்லை! பல ஆங்கிலத் திரைப்படங்கள் உண்மைக் கதைகளை மூலமாய் வைத்து வரும் என்பது பலரும் அறிந்ததே..அந்த வரிசையில் இதுவும் ஒன்று...நான் எல்லாத்தையும் சொல்வதை விட நீங்களும் படத்தைப் பார்த்தால் நல்லா இருக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

"சந்தோஷம் என்பது நாம் எப்போதும் தேடி அலைவது தான்.அதை நாம் நிரந்தரமாக தக்க வைப்பது என்பது இயலாத ஓன்று. எப்படி முயன்றாலும்." இது தான் படத்தின் மூலக் கரு, பெயர் காரணம் கூட.
படம் மிகவும் மெதுவாய் நகர்கிறது ..ஆனால் கண்டிப்பாக அதை நாம் உணராத வண்ணம் எடுத்து இருப்பது திறமை. சில பல அருமையான காட்சிகளில் நம்மை உருக வைத்து இருக்கிறார் வில் ஸ்மித். நடிப்பில் கலக்கி இருக்கிறார்..சும்மா சொல்லக் கூடாது மனுசன் நடிப்புல பிச்சிபுட்டார்.! படத்தின் முழு கவனம் வில்ஸ்மித் மீதும், அவர் மகன் மீதுமே இருக்கிறது. ஆக்ஷ்ன், காமெடி என்று கலக்கிய வில் இந்த முறை கஷ்டமான கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையான்டுள்ளார். ஆபாச காட்சிகளோ, ஆபாச வார்த்தைகளோ இல்லாமல் இருக்கும் இந்த படம் எல்லாரும் பார்க்கலாம்..
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.! பர்ஸ்யுட் ஆஃப் ஹாப்பினஸ் - முழுமை.!
பி.கு: மக்களே இது தான் என் முதல் திரை விமர்சனம். படத்தைப் பற்றி மேலும் விபரம் அறிய, இங்கே
கிளிக்கவும்