சிந்தனைச் சிதறல் - தமிழ்ப்பிரியன்

அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை!

Monday, July 10, 2006

மரணம் ‍



மரணம்
-----------------
உயிர் என்னும்
உன்னத தொடக்கத்தின்
நிரந்தர முடிவு..

அழையா விருந்தாளி ஒருவன்
சொல்லாமல் வருவானாம்,
போகாத ஊருக்கு
வழியும் சொல்வானாம்,
பாட்டிக் கதைகள் கேட்டதுண்டு...
நிலையில்லா இவ்வுலகம் விடுத்து
எவ்வுலகம் செல்ல இந்தப்
புதுப் பயணம்?
இக்கரைக்கு அக்கரை பச்சையோ??

வந்தவர் எவரும்
செல்லாமல் இருந்ததில்லை...
சென்றவர் எவரும்
வந்ததாய் செய்தியும் இல்லை..

கசப்பான உண்மை,
உனக்கான ஒரு நாளும் வரும்..
நீ மட்டும் தான் அன்றைய
நாளின் நாயகன்!!
கால பயம் வேண்டாமடா...

உன் நீண்ட உறக்கத்தில்
உனக்காய் வடிக்கும்
கண்ணீருக்கு மட்டும்
காலம் தானே மருந்தாகும்,
காலம் தான் மருந்தாகும்..

ஒரு முடிவைப் பற்றிய
தொடக்கம் இது..
நினைவுகளில் நீ
நிறைந்து வாழும் பொழுது,
மறிப்பதெல்லாம் மரணமாகுமா??

-தமிழ்ப்பிரியன்

Labels:

3 Comments:

At July 11, 2006 9:06 AM, Blogger நாமக்கல் சிபி said...

//நிலையில்லா இவ்வுலகம் விடுத்து
எவ்வுலகம் செல்ல இந்தப்
புதுப் பயணம்?
இக்கரைக்கு அக்கரை பச்சையோ??
//

அருமையான வரிகள்...

 
At July 12, 2006 2:46 PM, Blogger பாலசந்தர் கணேசன். said...

புடியுங்க்ள் ஓர் குத்து.
வேர்ட் ஃவெரிவிகேஷனை டிசேபிள் செய்யவும். பின்னூட்டம் இடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

 
At July 12, 2006 8:23 PM, Blogger தமிழ்ப்பிரியன் said...

நன்றி வெட்டிப்பயல்..

ஹா..ஹா..வாங்கிக் கொண்டேன் பாலசந்தர் அவர்களே...
வேர்ட் ஃவெரிவிகேஷனை டிசேபிள் செய்துவிட்டேன்.

 

Post a Comment

<< Home